அடையாறு புற்றுநோய் நிறுவனத் தலைவரும், மூத்த புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான மருத்துவர் வி. சாந்தா இன்று அதிகாலை காலமானார். தன்னுடைய தன்னலமற்ற சேவைக்காக பத்மபூஷண் ,பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், மாக்சே விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரின் இழப்புக்கு பல்வேறு துறையினைச் சேர்ந்த நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரில் புகழஞ்சலில் செலுத்தி வருகின்றனர். அவற்றில் சில:
Twitter/கவிஸ்ரீ தினேஷ்
அன்னை தெரசாவின் அவதாரமாய் பல உயிர்களை வாழ வைத்த அன்னையே... ஆழ்ந்த இரங்கல்!
Twitter/Pravinkumar Marimuthu
லட்சக்கணக்கான உயிர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றி வாழ்வளித்த ஆத்மா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா(93) அவர்கள் இறையடி சேர்ந்தார்.
Twitter/Sivakumar ps
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சாந்தா அம்மையாரின் மருத்துவ சேவையினை பாராட்டி அவருக்கு இந்திய உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட பாரத பிரதமர் முன்வரவேண்டும்.
Twitter/sarathi
ஆழ்ந்த இரங்கல், சாந்தா அம்மா சேவை மிகப்பெரியது, அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை தரவேண்டும்.
Twitter/தெய்வா நல்லவன்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக கருதப்படுகிறார்.
Twitter/P.Ashok Kumar
புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவரும், தமிழக மகளிருக்குப் பெருமை சேர்த்தவருமான மருத்துவர் சாந்தா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
Twitter/Thiruvasagam.Jay
மக்கள் சேவையை தன்னிறைவாக செய்தவர் மறைந்தார். மருத்துவர் பத்மவிபூஷன் V.சாந்தா அவர்களது இழப்பால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
Twitter/Priscilla Pandian
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மபூஷன் டாக்டர் V.சாந்தா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவையாற்றிய டாக்டர் V.சாந்தா அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
Twitter/Murugan G
டாக்டர் சாந்தா கனிவுடன் நோயாளிகளைப் பராமரித்தும், புற்றுநோயைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். தன் வாழ்வையே இதற்காக அர்ப்பணித்தார்.
Twitter/UdhayakumarSekar DCSE,BCA,MBA
அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவர் Dr.சாந்தா மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அனைத்து தரப்பு மக்களுக்கும்
புற்றுநோய்க்கான சிகிச்சை எளிதாக கிடைக்க 50 ஆண்டுகளாக ஒரு இயக்கமாகவே செயல்பட்டவர். அவரால் புற்றுநோயை வென்றவர்கள் ஏராளம். மருத்துவ உலகிற்கு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்.
Twitter/ராசா
’தள்ளாத வயதிலும் தன்னலமற்ற சேவை’. மறைந்தார் மக்களின் மருத்துவர் சாந்தா..!
Twitter/ Maruthu.s Yadhava
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு! ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!
Twitter/GOBI BJP Kanyakumari
மருத்துவர் சாந்தா அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமது வாழ்நாள் முழுவதும் பலருக்கு மருத்துவ பணி செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றினார்.
Twitter/m.j. syed ibrahim babu
அடையாற்றின் மற்றோர் ஆலமரம் போல புற்றுநோய் நிறுவனத்தை விருட்சமாக உருவாக்கிய மருத்துவர் சாந்தா அம்மாவின் மரணம், மருத்துவ உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே கருதப்படும்.
Twitter/மாதவன் ராமு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றால் உயிர்பிழைத்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கையின் அடையாளம் அம்மா சாந்தா. மருத்துவர் சாந்தா என்ற பெயர் சாதாரணப் பெயர் அல்ல; புற்று நோய் உலகில் தன்னம்பிக்கை தந்த சரித்திரப் பெயர்!
வாழும் நாளில் சாகும் நாள் தெரிந்து நரகத்தில் வாழ்ந்த பலரை வாழ்க்கை நகர வீதியில் உலாவ வைத்த சாவித்திரி !! புற்று நோய் பாதித்த பல ஏழைகளின் அன்பின் அடையாளம்!!!
Twitter/Lakshmipathi.v
மனித உடலில் உருவாகும் CANCER நோயை CANCEL செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணி Dr.V.சாந்தா. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Twitter/நெருப்பூர் பாலு
எந்தவிதமான கட்டணமுமின்றி இலட்சக்கணக்கான உயிர்களை புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றி, மறுவாழ்வளித்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்ம விபூசண் வி.சாந்தா அவர்களுக்கு, கண்ணீர் அஞ்சலி!
Twitter/Syedhyderal
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நின்றவர் யார்?
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சாந்தா அவர்கள் காலமானார். பல ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து அவர்களுக்காக உழைத்த உன்னத மருத்துவர் ஆவார். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!