பாஜகவிற்கு அனைத்து மதத்திலிருந்தும் தலைவர்கள் வருவர். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்கமாட்டோம். உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை நிறுத்தியதால் பாஜக இசுலாமியர்களுக்கு எதிரான கட்சி என தமிழகத்தில் சில கட்சியினர் பேசுகின்றனர். இந்தியா இப்போதுதான் உடனடி முத்தலாக்கை நீக்கியுள்ளது. ஆனால் 1961 ல் பாகிஸ்தான் எடுத்து விட்டது. உடனடி முத்தலாக்கை நீக்கிய 23 வது நாடுதான் இந்தியா , ஆப்கானிஸ்தான், இலங்கை , வங்கதேசம், இந்தோனேசியாவில் உடனடி முத்தலாக் நடைமுறை முன்பே தடை செய்யப்பட்டு விட்டது.