தூக்கத்தைக் கொல்லும் தனிமை உணர்வு

தூக்கத்தைக் கொல்லும் தனிமை உணர்வு
தூக்கத்தைக் கொல்லும் தனிமை உணர்வு
Published on

இரவானாலே தூக்கம் என்பதே வருவதில்லை என பலர் புலம்ப நாம் கேள்விபட்டிருப்போம். அதிகப்படியான நேரம் தனிமையை உணர்பவர்கள் தான் இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர் அந்த ஆராய்ச்சி சொல்கிறது.

சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். உண்மையில் தனிமையில் தவிப்பவர்கள் இவர்கள்தான். மாறாக அறையில் தனியாக இருப்பவரோ துணை இல்லாமலோ இருப்பவர்கள் அல்ல.

நீங்கள் எப்போதெல்லாம் தனிமையை உணர்கிறீர்கள்..? உள்ளிட்ட கேள்வி உள்பட 4 கேள்விகளை முன்வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படித் தனிமை அதிகம் உணர்ந்தவர்கள்தான் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே தனிமைஉணர்வை நீங்கள் கைவிட்டாலே உங்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com