கோவையில் குறைந்த செலவில் அனைத்து வசதிகளுடன் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் வீட்டைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
வீட்டோட பவுண்டேசன் தான் மாற்றவே முடியாதது!
ஒரு வீட்டோட கட்டுமானப் பொருளாக நாம் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், நம்ம தேர்ந்தெடுக்க முடியாத விசயம் அந்த வீட்டோட பவுண்டேசன். இந்த பவுண்டேசனைப் பொறுத்தவரை லோ-போரிங் பவுண்டேசன் மற்றும் பிஃல்லர் பவுண்டேசன் என இருவகை உண்டு. இதில், நாம் கட்டப்போற வீட்டோட மனைதான் பவுண்டேசனை தீர்மானிக்கும். அப்படி அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டை பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.
ரூ.30 லட்சம் செலவில் வீடு!
1480 சதுரடியில் அனைத்து வித வசதிகளுடன் அழகாகவும் பிரமிக்கும் வகையிலும் ரூ.30 லட்சம் செலவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த வீட்டோட வெளிப்புறத் தோற்றம் சூப்பராக இருக்கு. வெளிப்புறத் தோற்றத்தை மேலும் அழகுபடுத்த சதுரமாகவும் முக்கோண வடிவிலும் ஃபே விண்டோஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கு.
டெரக்கோட்டா ஜாலி ஒர்க்
அதேமாதிரி வீட்டோட மேற்புறத்தில் டெரக்கோட்டா ஜாலி ஒர்க் பண்ணியிருக்காங்க. இதையெல்லாம் வெளிப்புறத் தோற்றததிற்காக மட்டும் செய்யாமல், அதை பயனுள்ள வகையிலும் செய்திருக்கிறார்கள், உதாரணமாக டெரக்கோட்டா ஜாலி ஒர்க், காற்றோட்டத்திற்கு பயன்படும். அதேபோல இந்த வீட்டோட பவுண்டேசன் 5.5 அடி வரை பூமிக்கு அடியிலும், தரைக்கு மேலே 4 அடி என சுமார் 9.5 அடிக்கு கற்களால் பவுண்டேசன் அமைத்திருக்காங்க. அதுக்கு மேல வயர்கட் பிரிக் வைத்து சுவர் எழுப்பியிருக்காங்க. அரசோட அறிவுறுத்தலின் படி மழைநீர் சேகரிப்பு தொட்டியும் கட்டியிருக்காங்க.
வெர்டிபைட் கிளாசி பினிசிங் டைல்ஸ்
வெர்டிபைட் மேட் ப்னிஸ் டைல்ஸ் கொண்டு வீட்டோட முன் படியை அமைத்ததோடு வீட்டோட முன்கதவை தேக்கு மரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்திருக்கிறார்கள். கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்பது 20-க்கு 16 அளவிலான பெரிய ஹால். இந்த ஹாலோட தரைத்திற்க வெர்டிபைட் கிளாசி பினிசிங் டைல்ஸ் போட்டிருக்காங்க. பிரேம் உட்புறம் ஒரு போட்டோ இருப்பது போல ஜன்னல் அமைத்திருக்காங்க. இது பாக்குறதுக்கு செட்டிநாடு கட்டங்களில் காணப்படும் ஜன்னல் போல அழகாகவும் கலர் ஃபுல்லாகவும் இருக்கு. இந்த ஜன்னல் பார்ப்பதற்கு மரத்தால் செய்யப்பட்டது போல இருந்தாலும், முழுவதும் ஸ்டீல் மெட்டீரியல் பயன்படுத்தி செஞ்சிருக்காங்க.
நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும்
இந்த வீட்டோட சுவர் எழுப்பும் போதே ஜன்னல் வைத்துதான் சுவர் எழுப்பியிருக்காங்க. இந்த வீட்ல 3 பெட்ரூம் இருக்கு. 3 பெட்ரூம்லேயும் ரெஸ்ட் ரூம் உள்ளது. இந்த வீட்டோட மாஸ்டர் பெட்ரூம் 12-க்கு 14 அளவில் கட்டப்பட்டிருக்கு. நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்க வேண்டும் என்பதற்காக ரெண்டு பக்கமும் ஜன்னல் போட்டிருக்காங்க. ஜன்னலின் ஒரு பக்கமாக காற்று வந்தால் மற்றொரு ஜன்னல் வழியாக வெளியே போகும். காற்றோட ஓட்டம் எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கு தகுந்தாற்போல ஜன்னல் வெச்சிருக்காங்க. செங்கற்களால் எழுப்பப்பட்ட சுவர் முழுவதும் பூசப்படாமல் செங்கல் வெளியே தெரிகிறது. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
மாடிப்படிக்கு வெர்டிபைட் டைல்ஸ்
ஆனைத்து வசதிகளுடன் கூடிய 10-க்கு 7 அளவிலான சிறிய கிச்சன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை அளவெடுத்து மேனுவலாக மாடுலர் கிச்சன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிச்சன் ஸ்லாப் அனைத்தும் பிளாக் கேலக்ஸி கிரானைட் கொண்டு அமைத்திருக்காங்க. கிச்சன் நுழைவு வாயிலை ஆர்ச் அமைப்பு உள்ளது இது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. படிக்கட்டுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெர்டிபைட் டைல்ஸ் மாடிப்படிக்கு போட்டிருக்காங்க. அதேபோல கைப்பிடிக்கு எம்எஸ்.ஸ்டீல் பயன்படுத்தியிருக்காங்க. படியேறி மேலே சென்றால் மேற்புறத்தில் மண்ணால் செய்யப்பட்ட ஜாலி போட்டிருக்காங்க. இது வெப்பத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் வீடு சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கிறது.
மாடியில் ரெண்டு பால்கனி இருக்கு. அதுல தரை பகுதிக்கு வெப்பத்தை வெளியேற்றும் வெள்ளை நிற பெயிண்ட் அடுச்சிருக்காங்க. எவ்வளவு சூடாக இருந்தாலும் இதில் நடக்க முடியும் கஷ்டமாக இருக்காது. முதல் தளத்தில் ஒரு பெட்ரூம் அமைக்கப்பட்டிருக்கு. இங்கேயும் ஒரு வித்தியாசமாக ஜன்னல் அமைக்கப்பட்டிருக்கு. இன்னொரு பால்கனியில் செங்கல் ஜாலி மற்றும் டெரக்கோட்டா ஜாலி என இரண்டு ஜாலி ஒர்க் பண்ணியிருக்காங்க.
இந்த வீட்டோட உட்புறம் வெப்பநிலை சீராக இருக்கும், வெப்பநிலையும் குறைந்து காணப்படும். மிகவும் அமைதியாகவும் இருக்கும். வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ரிலாக்ஸ் வேண்டும். அப்படி இந்த வீட்டிற்கு வரும்போது அந்த ரிலாக்ஸ் கிடைப்பதாக உணர்கிறோம். ஏன்றார் இந்த வீட்டின் உரிமையாளர் ஆண்டனி.
1480 சதுரடியில் அமைந்துள்ள இந்த வீடு 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து வசதிகளுடனும் குறைவான செலவிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.