கேரளாவோட பாரம்பரிய வெட்டுக்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு!
இந்த வீட்டுக்கு பில்லர் பவுண்டேஷன், அதாவது, சூப்பர் ஸ்ட்ரக்ச்சர் பவுண்டேஷன் போட்டிருக்காங்க. இதனால் நாம எவ்வளவு உயரம் வேண்டுமானலும் வீட்டை உயர்த்தி கட்டிக் கொள்ளலாம். அதேபோல இந்த வீடு முழுவதும் உள்ள தரைத் தளத்துக்கு இந்தியன் மார்பிள் மட்டுமே பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டோட சுவரை எழுப்ப வெட்டுக்கல் பயன்படுத்தி இருக்காங்க. இது கேரளாவோட பாரம்பரிய கல் என்றே சொல்லலாம். இந்த வெட்டுக்கல்லுக்கு மேலே பிளாஸ்டிங் பண்ணியிருக்காங்க அதனால் பராமரிப்பு செலவு குறைய வாய்ப்புள்ளது.
வீட்டினுள் நுழையும்போது இடம் குறைவாக இருப்பது போல் தோன்றாமல் இருக்க பெரிய அகலமான ஜன்னல்கள் அமைத்துள்ளோம். நல்ல காற்றோட்டமாக வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் ஜன்னல்கள் வைத்துள்ளோம். செடிகள் வைத்து அழகு பார்ப்பதோடு இல்லாமல் அமர்ந்து பேசும் அளவிற்கு இடவசதியுடன் கூடிய ஓப்பன் பால்கனி கட்டியிருக்கிறோம். வாகனம் நிறுத்தவும் இடவசதி செய்து கொடுத்துள்ளோம். மழை பெய்யும்போது வாகனம் நனையாமல் இருக்க மேற்கூரையோடு வாகனம் நிறுத்தும் இடத்தை அமைத்துள்ளோம். என்றார் இந்த வீட்டின் கட்டிட வடிவமைப்பாளர் பின்ஸ்லால்.
ஹை சீலிங் பெரிய ஜன்னல்
இந்த வீட்டோட பிரமாண்டமான முன் கதவு. தேக்கில் செய்யப்பட்ட இந்த கதவு பார்ப்பதற்க பிரமாண்டமா இருக்கு. வீட்டிற்குள் நுழைந்தவுடன் 11க்கு 11 சைஸ்ல ஒரு லிவ்விங் ஏரிய இருக்கு. இது பாக்குறதுக்கு ரொம்ப காம்பேக்ட் ஆக இருக்கு. இந்த ஏரியாவின் இரண்டு புறமும் ஜன்னல்களால் சுவர் வைத்துள்ளார்கள். இது போன்று பிரமாண்டமாக ஜன்னல் வைக்கும்போது, காற்று நன்றாக உள்ளே வரும். இந்த ஏரியாவோட சீலிங் உயரம் 10 அடிக்கும் மேலே இருப்பதால் இந்த லிவ்விங் ஏரியா பார்ப்பதற்கு பிரமாண்டமாக தெரிகிறது.
அடுத்ததா இந்த வீட்டோட ரொம்ப முக்கியமான ஏரியா எதுன்னா ஓப்பன் டைனிங் ஏரியாவுடன் கூடிய ஓப்பன் கிச்சன் ஏரியாதான். அதேபோல் இங்கும் பிரமாண்டமான ஜன்னல் வச்சிருக்காங்க. எப்பொழுதுமே ஜன்னலுக்கு கீழே இருக்குற ஷில் லெவலில் 2 முதல் 3 அடியில் இருந்துதான் ஜன்னலை வைக்கத் தொடங்குவாங்க. ஆனா, இங்க 1 அடியில் இருந்தே ஜன்னலை வைக்கத் தொடங்கியிருக்காங்க. அதேபோல ஜன்னலின் உயரமும் 4 அடிதான் இருக்கும். ஆனா, இங்க பிரமாண்டமா 6 அடி உயரத்துக்கு ஜன்னல் வச்சிருக்காங்க.
இந்த வீட்ல இருக்குற கிச்சன் பக்காவான ஒரு மாடுலர் கிச்சன். இந்த கிச்சன்ல கவுன்டர் டாப் பைல் மெட்டீரியல்ல ஸ்லாப் போட்டிருக்காங்க. அதேமாதிரி கிச்சன் சுவருக்கு மொராக்கோ ஸ்டெய்ல் டைல்ஸ் ஒட்டியிருக்காங்க. இது பாக்குறதுக்கு நல்லா இருக்கு. அதேபோல ஜன்னலை ஒத்து 8 பேர் உட்கார்ந்து சாப்பிட ஏதுவாக பெரிய கண்ணாடி டைனிங் டேபிள் போட்டிருக்காங்க.
இந்த வீட்ல ரெண்டு ஒர்க் ஏரியா இருக்கு. அதுல முதல் ஒர்க் ஏரியா கிச்சன் சார்ந்த ஒரு ஒர்க் ஏரியாதான். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்லாப்-க்கு பிளாக் கேலக்ஸி கிரானைட் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ஒர்க் ஏரியாவும் ஒரு மாடுலர் கிச்சன் செட்அப்ல தான் இருக்கு. பொதுவா ஒர்க் எரியாவ மாடுலரா பண்ணமாட்டாங்க. ஆனா, இங்க மாடுலரா பண்ணியிருக்காங்க அது ரொம்பவே நல்லா இருக்கு. இதேபோல இன்னொரு ஒர்க் எரியா இருக்கு. இதுல நார்மலா கேஸ் ஸ்டவ் பயன்படுத்தி எப்படி சமைப்பாங்களோ அதற்கு ஏற்றவாறு போட்டிருக்காங்க. இந்த ஒர்க் ஏரியாவ காம்பவுண்ட் சுவரை ஒட்டியே டிசைன் பண்ணியிருக்காங்க.
அடுத்ததா இந்த வீட்டு மாடியில் இருக்கக்கூடிய பெட்ரூம். இந்த வீட்டோட மாடியில் ரெண்டு பெட்ரூம் இருக்கு. இந்த ரெண்டு பெட்ரூமும் ஒரே அளவில் ஒரே மாதிரியா இருக்கு. இந்த இரண்டு பெட்ரூமிலும் பெரிய ஜன்னல் வச்சிருக்காங்க. அதேபோல சுவரின் இரண்டு புறமும் உள்ள மூலையில் ஜன்னல் வச்சிருக்காங்க. எப்போதுமே கிராஸ் வென்டிலேஷன் எனும்போது, காற்றோட ப்ளோ சுற்றியிருக்கும். அதனால அறை முழுவதும் காற்று பரவி காற்றோட்டத்துடன் இருக்கும்.
இந்த வீட்டோட ப்ரண்ட் பார்க்கிங் ஏரியா. அதுல கோப் ஸ்டோன் போட்டிருக்காங்க. அடுத்ததா ஒரு சின்ன சிட்அவுட் இருக்கு. இந்த வீடு இருக்குற ஏரியா வெள்ளப் பெருக்கு அதிகமா உள்ள ஏரியா என்பதால் தரை பகுதியில் இருந்து 5 அடிக்கு வீட்டை உயர்த்தி இருக்காங்க. வெள்ளம் வந்தாலும் வீட்டிற்குள் தண்ணீர் தேங்கி நிற்காத அளவுக்கு இந்த வீட்டை டிசைன் பண்ணியிருக்காங்க. அடுத்ததா இந்த வீட்டோட முன்பகுதியில் இருக்கும் பிரைவேட் சிட்அவுட். இந்த சிட்அவுட் தரைத் தளத்துக்கு தாந்தூர் ஸ்டோன் அதுவும் ரொம்ப பேமஸான க்ரே கலர்ல போட்டிருக்காங்க.
இந்த வீட்டோட டிசைன்ல ஹாலுக்கு அடுத்ததா ஸ்டேர்கேஸ் டிசைன் பண்ணியிருக்காங்க. இந்த ஸ்டேர்கேஸையும் ஓப்பன் டைனிங் எரியாவையும் பிரிக்கிறது ஒரு செமி வால்தான். ஏன்னா கொஞ்சம் இடம்தான் சுவர் வச்சிருக்காங்க.. மீதி இடத்த டெரக்கோட்டா ஜாலி வச்சி ஃபில் பண்ணியிருக்காங்க. அதேபோல படியில் ஏறும்போதே நல்லா கிரிப்பாக இருக்கு. அதுக்கு லெபட்டோ ஸ்டீல் பினிஷ் கிரானைட்தான் பயன்படுத்தி இருக்காங்க. அதேபோல் கைப்பிடிக்கு மரம்தான் பயன்படுத்தி இருக்காங்க. அதுல மைல்டு ஸ்டீல் வச்சு பிரேம் பண்ணியிருக்காங்க.
லேண்டிங் பொருத்தவரை இதோட சைடு சுவருக்கு கவுல் டெரக்கோட்டா ஜாலி பயன்படுத்தி இருக்காங்க. இது நல்ல காற்றோட்டத்தையும் பிரைவசியையும் கொடுக்குது. வீட்டின் முதல் தளத்திற்கு வந்தவுடன் ஒரு சின்ன ஸ்டெடி ப்ளேஸ் இருக்கு. இங்கேயும் வெளிச்சத்துக்காக ஒரு பிரமாண்டமான ஜன்னல் வச்சிருக்காங்க. இந்த வீட்ல வெளிச்சத்துக்கும் காற்றுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.
இந்த வீடு காம்பேக்ட் ஆன டிசைனில் இருந்தாலும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இதற்க காரணம் சீலிங் உயரத்தை உயர்த்தியதன் மூலமும், அதேபோல் ஜன்னலோட அளவையும் உயர்த்தியுள்ளதால் இந்த வீடு சின்னது போல் இல்லாமல் பிரமாண்டமான வீடுபோல் தெரிகிறது. அதேமாதிரி இந்த வீட்டை மிகவும் அழகாக்கியது இன்டீரியர் ஒர்க்ஸ்தான். இன்டீரியர் ஒர்க்குக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.
தரைத்தளம் 1000 சதுரடியும் முதல் தளம் 750 சதுரடியிலும் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு 35 லட்சம். இதேபோல இன்டீரியர் ஒர்க்குக்காக 10 செலவு செய்திருக்கிறார்கள். இந்த வீடு கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்திருக்கும். இதுபோன்ற வித்தியாசமான வீடுகளின் சிறப்பான தகவல்களுடன் மீண்டும் பார்க்கலாம்.