ஃப்ளேம்டு கிரானைட் (Flamed granite) கற்கள்
இந்த வீட்டுக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது கோர்டியார்ட். இந்த வீட்டில் மொத்தமாக இரண்டு கோர்டியார்ட் உள்ளன. அவைதான் இந்த வீட்டின் தரைத்தளத்துக்கான லைட் சோர்ஸ் என்றே சொல்லலாம். இந்த கோர்டியார்ட்டின் தரைத்தளத்துக்கு மீதமான ஃப்ளேம்டு கிரானைட் கற்களை பயன்படுத்தி உள்ளனர்.
செங்கல், சிமெண்ட் மற்றும் டைட்டானியம் பவுடர் பயன்படுத்தி எழுப்பப்பட்ட சுவர்:
இந்த காம்பேக்டான வீட்டில், ஒரு காம்பேக்டான ஹால். சின்னதாக ஒரு வீடு கட்டும்போது அந்த சிறிய இடத்தில் நாம் என்னவெல்லாம் செய்யப்போறோம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு உதாரணமாக இந்த வீட்டில் நிறைய விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஹாலின் தரைத்தளத்துக்கு செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வீட்டின் முன்பக்க சுவருக்கு செங்கல், சிமெண்ட் மற்றும் டைட்டானியம் பவுடர் பயன்படுத்தி எழுப்பியுள்ளனர். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.
ஏஏசி பிளாக்ஸ் (ACC Block) பயன்படுத்தி எழுப்பப்பட்ட சுவர்
10-க்கு 20 சைஸ் இடமுள்ள ஒரு இடத்தில் காம்பேக்டான வீடு கட்டும்போது, 9 இன்ச் செங்கல் வைத்து அதற்கு மேல் இரண்டு இன்ச் பூசி, 11 இன்ச் இடத்தை வீணடிப்பதை தவிர்த்துள்ளனர். அதற்கு பதிலாக் சுவர் எழுப்ப மாற்று பொருளை பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று யோசித்து 6 இன்ச் அளவுள்ள ஏஏசி பிளாக்ஸ் பயன்படுத்தி சுவரை எழுப்பியுள்ளனர். இந்த ஏஏசி பிளாக்ஸ் பயன்படுத்தியதால் வீட்டின் உட்புற ஏரியா அதிகமாகவே கிடைத்துள்ளது.
3 லெவல் வீடு:
இந்த வீடு மொத்தம் 3 லெவலாக இருக்கிறது. முதல் லெவலில் சின்னதாக ஒரு ஹால், அடுத்ததாக இந்த வீட்டை அடுத்து லெவலுக்குச் செல்ல ஒரு ஸ்பைரல் படிக்கட்டு இருக்கின்றன. அதன்மேலே சென்றால் இரண்டு பக்கமும் சுவர் போக மீதமுள்ள இடத்தை இரண்டாக பிரித்திருக்கிறார்கள். இதில், ரெஸ்ட் ரூம் சுவரை செங்கல் கொண்டு எழுப்பியுள்ளனர்.
தேக்குமரத்தால் ஆன தரைத்தளம்
ஓவ்வொரு வீட்டிலும் சில ஏரியாக்களை பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறதே என்று தோன்றும். அதேபோல இந்த வீட்டில் மனம் கவரும் வகையில் இருப்பது இரண்டாவது மற்றும் மூன்றாவது லெவலுக்கு இடையே உள்ள ஒரு லெவலுக்குச் செல்லும் படிக்கட்டுகள். இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்த இடத்தை பெட்ரூமாக அமைத்திருக்கிறார்கள். இதன் தரைத்தளத்துக்கு கான்கிரீட் மீது தேக்கு மரத்தை பயன்படுத்தி உள்ளனர். அடுத்ததாக இந்த வீட்டின் 3வது லெவல். இங்கே ஒரு பெட்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதோட தரைத்தளத்துக்கு 3 வகையான பினிஸிங் கொண்ட கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
200 சதுரடியில் கட்டப்பட்டுள்ள காம்பேக்ட் (Compact) வீடு
இந்த வீட்டின் முதல் பிளஸ் என்னவென்றால், காம்பேக்டான வீடாக இருந்தாலும், காம்பேக்ட் என்பது எந்த வகையிலும் நெகடிவ் ஆகாமல் அதையெல்லாமே பாசிடிவ் ஆக செய்துள்ளார்கள். இந்த வீட்டோட மொத்த ஏரியாவே 200 சதுரடிதான். இது 3 லெவல் இருக்கும் போது, இதோட பில்அப் ஏரியா 600 சதுரடிதான். அதோட பெட்ரூமையும் சேர்த்தால் 700 சதுரடிக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த சின்ன இடத்தில் அதிகப்படியான மெட்டீரியல்ஸ் பயன்படுத்தி உள்ளனர். ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த வீட்டை கட்ட 25 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் சொல்வதென்ன?
“இந்த வீடு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வர்றவங்க எல்லோருமே, ‘ரொம்ப வித்தியாசமா இருக்கு. இவ்வளவு சின்ன இடத்துல அழகா பண்ணியிருக்கீங்க. அருமையா இருக்கு’ன்னு சொல்லிட்டு சந்தோஷமா பேசுறாங்க” என்கிறார் வீட்டின் உரிமையாளர் லதா.