சசிகலா எப்போது விடுதலை ஆவார்? தமிழக அரசியலில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறதோ? என்ற ஆவலோடு தமிழகமே காத்துக்கொண்டிருக்கும் சூழலில், சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமானவரும் பா.ஜ.க தேசிய நிர்வாகியுமான ஆசீர்வாதம் ஆச்சாரி, ‘சசிகலா நடராஜன் பெங்களூர் பரப்பன அஹ்கார சிறையிலிருந்து ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலையாவதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்தக்கட்ட தகவலுக்கு காத்திருங்கள்” என்று கடந்த ஜூன் -25 ந்தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்து பரபரப்பை ஏற்படுத்தினார். சசிகலா விடுதலை ஆவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறிய ஆகஸ்ட் 14 இன்றுதான். அவர் ட்விட் போட்ட ஜூன் 25 ஆம் தேதியிலிருந்து இன்றோடு 50 நாட்கள் ஆகிறது.
ஏற்கனவே, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியனும் ” சசிகலா 1996 ஆம் ஆண்டு சிறையில் இருந்த நாட்கள், 2014 ஆம் ஆண்டு சிறையில் இருந்த நாட்கள், இருமுறை பரோலில் வந்த நாட்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுப்பார்த்தால் 2020 செப்டம்பர் விடுதலை ஆகவேண்டும். ஆனால், நாங்கள் எடுக்கும் சட்டப்பூர்வமான முயற்சிகளின் அடிப்படையில் பார்த்தால் செப்டம்பருக்கு முன்னரே ஜூன், ஜூலையில் சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்தபடி இப்போதுவரை சசிகலா விடுதலை ஆகவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த, வழக்கில் கர்நாகட சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் அபராதமும் விதித்திருந்தார். அதனை, எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஜெயலலிதா தரப்பு. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்குபேரையும் விடுதலை செய்தார். இதனை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பையே உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டதால் மீதமுள்ள 3 பேரும் கடந்த 2017 பிப்ரவரி 15 ந்தேதி பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதுவும், சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பொறுப்பை ஏற்கவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் சசிகலா விடுதலைக் குறித்து பா.ஜ.கவின் தேசிய நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரியின் டிவிட்டர் பதிவு முக்கியத்துவம் பெற்றது. அதற்குக்காரணம், அவர், சுப்பிரமணிய சுவாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுதான். சுப்பிரமணிய சாமி முன்னிலையில்தான் பா.ஜ.கவில் இணைந்தார் ஆசீர்வாதம் ஆச்சாரி. அதுமட்டுமல்ல, இதற்குமுன் அதிமுகவிற்கும் நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.
இந்நிலையையில், ஆசீர்வாதம் ஆச்சாரி டிவிட்டரில் தெரிவித்ததுபோல், ஆகஸ்ட்-14 ந்தேதி சசிகலா விடுதலை ஆவதற்கான எந்த அறிகுறியும் இல்லாதது குறித்து அவரிடமே கேட்டறிய முயற்சித்தோம். ஆனால், விளக்கங்களை பெற முடியவில்லை. இருப்பினும், கொரோனாவின் தாக்கமே சசிகலாவின் விடுதலை தாமதமாவதற்கு முக்கியமான காரணம் என்ற்
- வினி சர்பனா