காலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்!

காலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்!
காலை உணவை கைவிட்டால், இதெல்லாம் கன்ஃபார்ம்!
Published on

அலாரம் வைத்து, நான்கு முறை அதைத் தட்டித் தூங்க வைக்கிறீங்களா? லேட்டாக எழுந்து கிளம்பி, காலை உணவை சாப்பிடாமல் ஆபிஸுக்கு ஓடுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குத்தான் இந்த செய்தி.

► டயாபட்டீஸ் அபாயம்

காலை உணவைத் தவிர்க்கும் பெண்களுக்கு நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 46,289 பெண்களிடம் ஆறு வருடங்களாக ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

► எடை அதிகரிப்பு

பட்டினி கிடந்து ஸ்லிம்மாகலாம் என்பவர்களை எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். காலை உணவைத் தவிர்ப்பவர்கள் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள தூண்டப்படுகிறார்கள். பசியும் அதிகமாகி அளவுக்கதிகமாகச் சாப்பிட்டு விட்டு, வெயிட் லாஸ் ப்ளான்களை போடுவது பயனற்றது.

► ஆற்றல் குறைபாடு

144 ஆரோக்கியமான மனிதர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்திய பிரிட்டிஷ் ஆய்வுக் குழு. 144 பேரை மூன்று குழுக்களாகப் பிரித்தார்கள். காலை உணவை ஒரு குழுவுக்கும், காபியை மட்டும் ஒரு குழுவுக்கும், காலை உணவாக எதையுமே கொடுக்காமல் ஒரு குழுவையும் விட்டிருக்கிறார்கள். இரண்டு மணிநேரத்திற்கு பிறகான சோதனையில், நினைவுத்திறன் குறைவாகவும், சோர்வாகவும் இருந்தது ஒன்றுமே சாப்பிடாத குழுதான்.

காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மறதி குறித்து அதிகம் புலம்புவார்கள்.

மேலும், காலை உணவைத் தவிர்ப்பவர்கள், வளர்சிதை மாற்றம் மோசமடைதல், முடி கொட்டுதல், ஒற்றைத் தலைவலி, கற்றல் குறைபாடு, உயர் ரத்த அழுத்தம் போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் கதவைத் திறந்து விடுகிறார்கள் என்கின்றன தொடர் ஆய்வுகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com