காற்றுத் தரக் குறியீட்டு எண் என்றால் என்ன ?

காற்றுத் தரக் குறியீட்டு எண் என்றால் என்ன ?
காற்றுத் தரக் குறியீட்டு எண் என்றால் என்ன ?
Published on

AIR QUALITY INDEX என்று அழைக்கப்படும் காற்றுத் தரக் குறியீட்டு எண் என்பது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். காற்றின் தரத்தை கண்காணிக்க கடந்த 2014ஆம் ஆண்டு முதல் காற்று தரக் குறியீட்டு முறை டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் தங்களின் சுற்றுப்புற காற்றின் தரத்தினை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் 240 முக்கிய நகரங்களில் அறிவிப்புப் பலகையை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வைத்துள்ளது. டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத் போன்ற சில நகரங்களில் நிகழ்நேர தகவல்களை தரும் வகையில் தொடர்ச்சியாக கண்காணிக்கும் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

காற்றுத் தரக் குறியீட்டு எண்கள் ஆறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, காற்றுத் தரக் குறியீட்டு எண்ணில் பூஜ்யம் முதல் 50 வரை பதிவானால் குறைந்த பாதிப்பே ஏற்படும். 51 முதல் 100 வரை பதிவானால் எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய நபர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. 101 முதல் 200 வரை பதிவானால் ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய், இருதய நோய் உள்ளவர்களுக்கு, குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் கோளாறு ஏற்படுத்தும். 201 முதல் 300 வரை பதிவானால் மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு சுவாசக் கோளாறும், ஏற்கெனவே இருதய நோய் உடையோருக்கு அதிக கோளாறுகளையும் ஏற்படுத்தும். 301 முதல் 400 வரை மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மேலும் இருதய, நுரையீரல் நோய் உடையவர்களுக்கு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 401 முதல் 500 வரை நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

காற்று மாசை குறைக்க அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com