2050-ல் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் தெரியுமா?

2050-ல் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் தெரியுமா?
2050-ல் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் தெரியுமா?
Published on

சர்வதேச அளவில் தற்போது பார்வையற்றோரின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சம். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சர்வதேச அளவில் 1.88 நாடுகளில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1980 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி கணக்கிட்டுப் பார்க்கும் போது 2050-ம் ஆண்டில் 11 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையற்றோராக இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. 

பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வளர்ந்து வரும் ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வரும் ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து 2050-ம் ஆண்டில் 11 கோடியே 50 லட்சமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய அளவைவிட 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு வயது முதிர்ச்சியே காரணம் எனவும்,  சர்வதேச அளவில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கையும் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. சிகிச்சையின் மூலம் இவர்களின் கண் பார்வையற்ற நிலையை சரி செய்ய முடியாது என்றும், கண் பார்வை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதனைத்தொடர்ந்து 58 கோடியே 80 லட்சமாக உயரும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com