வேதாரண்யம் கடற்பகுதியில் விஷத்தன்மையுள்ள பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்குகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்பகுதியில் விஷத் தன்மையுள்ள பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இந்த வகை மீன்கள் தன் உடலை பத்து மடங்கு பருமன் உள்ளதாக மாற்றி கொள்ளும் தன்மை வாய்ந்தது. தனது எதிரிகளுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் நீர் அல்லது காற்றை கொண்டு தனது உடலை ஊதி பெரிதாக்கும் ஆற்றல் பெற்றவை பேத்தை மீன்கள்.
பேத்தையன் என மீனவர்களால் அழைக்கப்படும் இந்த மீனின் உடல் முழுவதும் முள் இருக்கும் என்பதால் முள்ளம் பன்றி மீன் என மீனவர்கள் அழைக்கின்றனர். இந்த அரியவகை மீன்கள் கோடியக்கரை கடல் பகுதியில் ஆங்காங்கே இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடலின் நீரோட்டம் மற்றும் இயற்கை இடர்பாடுகள், சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பேத்தை, ஜெல்லி போன்ற மீன்களும் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன