தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்ய வேதாந்தா குழுமம் சார்பில் நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு செய்துள்ளது. ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

தாமிர உருக்கு வளாகம், சல்பரிக் அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள 10 பிரிவுகளும் விற்பனைக்கு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால், அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திய நிலையில், ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்பாக விற்பனைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு வேதாந்தா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com