சவுகார்பேட்டையில் தான் காற்று மாசு அதிகம்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

சவுகார்பேட்டையில் தான் காற்று மாசு அதிகம்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை
சவுகார்பேட்டையில் தான் காற்று மாசு அதிகம்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை
Published on

சென்னையில் வழக்கத்தை விட தீபாவளியின் போது காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும், சவுகார்பேட்டையில்தான் காற்று மாசு அதிகம் என்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பொது இடத்தில் வெடி வெடிப்பதால் சுற்றுப்புறம் மாசடைவதாகவும், அதனால் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் வெடி வெடிப்பதால் ஏற்படும் புகையினால் சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் மாசுக்கட்டுபாடு வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட ஒலி மாசு குறித்த துல்லியமான அளவை இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், சென்னையில் வழக்கத்தை விட தீபாவளியின் போது காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையின் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிகபட்சமாக 100 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய நுண்துகள் சவுகார்பேட்டையில் தான் 777 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருவல்லிக்கேணியில் 597-ம், நுங்கம்பாக்கத்தில் 541-ம், தி.நகரில் 529 மைக்ரோ கிராமும் நுண்துகள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டு தகவலில், சென்னை காற்றில் ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் இருக்க வேண்டிய நுண்துகள் 158 ஆக இருந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தில் 158, மீனம்பாக்கத்தில் 123, தரமணியில் 127 என நுண்துகள் அளவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காற்று மாசு அதிகரித்திருப்பது சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com