தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழை பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்.
“வெப்பச்சலனம் காரணமாக அரபிக் கடலோர பகுதிகளான கேரளா, தெற்கு மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் கன மழை பொழியும். இந்த மாற்றத்தால் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும்.
நெல்லையில் பாபநாசம் தொடங்கி மாஞ்சோலை வரையிலான பகுதிகளிலும், கொடைக்கானல், குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் மிக கனமழை பொழிவு பதிவாகலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை பொறுத்தவரை 19 ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நவம்பர் 25 அல்லது 26 ஆம் தேதி அதிக மழை பொழிவு இருக்கலாம். அது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக கூட ஏற்படலாம்” என தெரிவித்துள்ளார்.