100 கிராம் எடை மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய குரங்குகள் திராட்டை பழத்தைக் கடித்து திண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி பர்வின் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலகின் சிறிய குரங்குகள். சிறியதாக இருந்தாலும் அழகாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
குரங்குகள் வகைகளில் சிம்பன்சி, கொரில்லா, சிங்கவால் குரங்கு என்று பலவகைகள் உண்டு. ஒரு அடி உயரம்வரை வளரக்கூடிய குரங்குகளில் 100 கிராம் எடை மட்டுமே உடைய பிக்மி மார்மோசெட்ஸ் குரங்குகள்தான் உலகின் மிகச்சிறிய குரங்குகள். இவ்வகை அமேசானின் பேசினின் மழைக்காடுகளில் காணப்படும் அறிய வகை குரங்கு இனமாகும்.