உலகில் நீர், தங்கம் என ஏதேனும் ஒரு தேவைக்காக பூமியில் தினமும் செயற்கையாக மனிதர்களால் துளைகளோ, பள்ளங்களோ வெட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்திற்குள் புதைந்துள்ள அளவற்ற ஆற்றலை பெற உலகின் ஆழமான துளையை தோண்ட திட்டமிட்டுள்ளது ஒரு நிறுவனம். பூமிக்குள் உள்ள ஜியோ தெர்மல் ஆற்றலை எடுக்கும் நோக்கில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை Quaise Energy என்ற நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
சுமார் 63 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாம். இந்த பணி நிறைவடைந்தால் ஆற்றல் சக்தியில் மிகவும் சுத்தமான ஜியோ தெர்மல் ஆற்றம் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பணியை மில்லிமீட்டர் வேவ் எனர்ஜி ட்ரில்லிங் சிஸ்டம் என்ற முறையின் கீழ் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது மனிதர்களால் தோண்டப்பட்ட பூமியில் உள்ள ஆழமான துளையாக ரஷ்யாவில் உள்ள 12 கிலோமீட்டர் ஆழ துளை அறியப்படுகிறது.