சுமார் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த அரிய வகை நுண்ணுயிர் இனமான நீர்க் கரடியின் (Tardigrades) எச்சத்தை அம்பர் ஒன்றில் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த நீர்க் கரடி வகையில் இது புதிய உயிரினம் (Species) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 0.5 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே வளரக் கூடிய இந்த நீர்க் கரடியை வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்நோக்கியின் துணையுடன் மட்டுமே இதை பார்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
8 கால்கள், ஊசி போன்ற நகங்கள் கொண்டிருக்கும் இந்த உயிரினம் பாசியில் அதிகம் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல தசாப்தங்களுக்கு பாசியினுள் இவை படிந்திருக்கும் தன்மையை கொண்டது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் மூன்றாவது முறையாக நீர்க் கரடியின் எச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பர்?
இது வெறும் மரப்பிசின் தான். என்ன இது 30 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்து, கெட்டியான மரப்பிசின். சமயங்களில் இந்த மரப்பிசினில் பூச்சிகளும் விழுந்து கெட்டியாகி விடுகிறது. அதில் சில பூச்சிகள் நிகழ்கால உலகில் இருப்பதில்லை. அதனை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகம் செய்கின்றனர்.