குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் அள்ளி எடுக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் கொண்டுவந்து கொட்டுவதுடன் அங்கு வைத்தே இந்த குப்பைகளை எரித்து வருகிறது. அதில் குறிப்பாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், துணிகள் என பல்வேறு வகையிலான குப்பைகளையும் மலைபோல் குவித்து எரிப்பதால் இந்த பகுதி மக்கள் புகையால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.