நீலகிரி: மீண்டும் ஊருக்குள் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன் - அச்சத்தில் மக்கள்

நீலகிரி: மீண்டும் ஊருக்குள் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன் - அச்சத்தில் மக்கள்
நீலகிரி: மீண்டும் ஊருக்குள் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன் - அச்சத்தில் மக்கள்
Published on

20 நாட்களுக்குப் பிறகு ஊருக்குள் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன். பள்ளியின் சுற்று சுவரை இடித்துத் தள்ளியது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து பிடித்து வரப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள தொரப்பள்ளி, புத்தூர்வயல், மண்வயல், போஸ்பெரா உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு வீடுகளை இடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது.

விநாயகன் யானைக்கு மதம் பிடித்திருந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அடர் வனப்பகுதிக்குள் சென்று இருந்தது. இதையடுத்து கடந்த 20 நாட்களாக யானை வனத்தை விட்டு வெளியே வராத நிலையில், வனத்துறையினரும் மக்களும் சற்று நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்த காட்டு யானை விநாயகன் அம்பலமூலா பகுதிக்குள் நுழைந்து அங்கு உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டடத்தை இடித்து சேதப்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து பள்ளியின் நுழைவு வாயிலையும் உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானை விநாயகன் வயலுக்குள் இறங்கி நெற்பயிர்களை தின்றதோடு மிதித்தும் சேதப்படுத்தியது. 20 நாட்களுக்கு பிறகு காட்டு யானை விநாயகன் மீண்டும் ஊருக்குள் வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com