50 கோடி பேருக்கு தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம்: அருண் ஜெட்லி அறிவிப்பு

50 கோடி பேருக்கு தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம்: அருண் ஜெட்லி அறிவிப்பு
50 கோடி பேருக்கு தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம்: அருண் ஜெட்லி அறிவிப்பு
Published on

நாட்டில் 50 கோடி பேருக்கு தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த‌ மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு‌ முழுமையான சுகாதார பாதுகாப்பு அளிக்கும் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். ஒரே நேரத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார பாதுகாப்பு என்பது உலகின் மிகப் பெரிய திட்டம் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நாட்டில் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று கூறிய அருண் ஜெட்லி இந்த மையங்கள் தொற்றுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியவையாக இருக்கும் என்றும் அறிவித்தார். இந்த மை‌யங்களை அமைக்க இந்த ஆண்டு 120‌0 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்தார். நாடு முழுவதும் மருத்துவ தரத்தை மேம்படுத்தி புதிய மருத்துவர்களை உருவாக்க 24 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com