இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் இன்றும், நாளையும் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடக்கு பாகிஸ்தானின் நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் வேகம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்திய நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருவதால், குஜராத், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.