கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் சுற்றித்திரியும் 'பாகுபலி' என்ற காட்டு யானையால் மலைகிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளாக நடமாடிய மிகப்பெரிய ஆண் யானை, விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது. நீளமான தந்தங்கள், வியக்க வைக்கும் தோற்றம் ஆகியவற்றால் 'பாகுபலி' என அழைக்கப்படும் அந்த யானை, காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் திரும்பியது. 'பாகுபலி'யை மயக்க ஊசி போட்டு பிடித்து ரேடியோ காலர் கருவி பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். கடந்த ஜூன் மாதம், 'பாகுபலி' யானையை பிடிக்க, 3 கும்கி யானைகளுடன் ஒரு மாதமாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ஒரு கட்டத்தில் 'பாகுபலி' யானை தானாகவே காட்டுக்குள் சென்றது. ஆனால், ஓராண்டுக்குப் பின் தற்போது, 'பாகுபலி' யானை மீண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் வலம் வருகிறது. கல்லார் பகுதியில் சாலையை கடந்தது 'பாகுபலி'தான் என உறுதி செய்துள்ள வனத் துறையினர், அதை எப்படி கையாள்வது என ஆலோசித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: `ட்ராமா கான்ஃபரன்ஸ்’-பிரதமரின் பெட்ரோல் விலை குற்றச்சாட்டுக்கு மாநில முதல்வர்கள் எதிர்வினை