கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ?

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ?
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ?
Published on

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து இந்திய அரசு சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதிப்பிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை :

தனிப்பட்ட முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவுமே இருக்க வேண்டும்.

அடிக்கடி கைகளை சோப் அல்லது அதற்கு இணையான திரவங்களை கொண்டு கழுவ வேண்டும்.

இருமலோ, தும்பலோ வரும்போது முகத்தை அதற்கேற்ற துணிகளையோ, கவசங்களை கொண்டு மூட வேண்டும்.

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் கட்டாயம் கைகளையும் கால்களையும் சுத்தமாக சோப் கொண்டு கழுவ வேண்டும்.

ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும் சோப் அல்லது திரவத்தை பயன்படுத்து கைகளையும் கால்களையும் சுத்தப்படுத்துவது நல்லது.

உபயோகித்த டிஷ்யூ பேப்பர்களை உடனடியாக அபு்புறப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து உடல்நிலை சீராக இல்லாமல் இருப்பது போல உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.

செய்யக் கூடாதது ?

தொடர் இருமல் காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.

எச்சிலை பொது இடங்களில் துப்பக்கூடாது.

விலங்குகள் இடமிருந்து விலகியிருத்தல், சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதை தவிர்க்க வேண்டும்.

விலங்குகள் பண்ணைக்கு செல்வது, விலங்குகள் விற்கும் கூடங்களுக்கோ சந்தைகளுக்கோ செல்வது, விலங்குகள் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com