காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம்

காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
Published on

உலகளவில் காற்று அதிகம் மாசு அடைந்துள்ள நகரங்கள் பட்டியலில் ஹரியானாவிலுள்ள குருகிராம் நகரத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

‘க்ரீன்பீஸ்’ என்ற தன்னார்வுத் தொண்டு நிறுவனம் உலகளவில் காற்று அதிகம் மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனை ‘IQAir AirVisual 2018 World Air Quality Report’என்ற அறிக்கையை மூலம்  வெளிப்படுத்துயுள்ளது. 

இந்த அறிக்கையில் உலகளவில் காற்று அதிகம் மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அத்துடன் இப்பட்டியலில் முதல் ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குருகிராம், காஸியாபாத், ஃபரிதாபாத், நொய்டா, பிவாடி, பாட்னா மற்றும் லக்னோ ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் இப்பட்டியலில் முதல் 20 இடங்களிலுள்ள 18 நகரங்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்தவையாக உள்ளன. இந்த அறிக்கையின்படி உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது. அத்துடன் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள 64% நகரங்களின் காற்றின் மாசு அளவு உலக சுகாதார மையத்தால் அணுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல் உலகளவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் விளைவினால் எதிர்காலத்தில் 70 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரிடும் என இந்த அறிக்கை ஒரு பகீர் தகவலையும் அளித்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com