புவி வெப்பமயமாதல்: மகரந்தத்தைக் காப்பாற்ற நிறம் மாறும் பூக்கள்..!

புவி வெப்பமயமாதல்: மகரந்தத்தைக் காப்பாற்ற நிறம் மாறும் பூக்கள்..!
புவி வெப்பமயமாதல்: மகரந்தத்தைக் காப்பாற்ற நிறம் மாறும் பூக்கள்..!
Published on

உலகம் முழுவதும் புவிவெப்பமயமாதல் காரணமாக பல்லுயிர்ச் சூழலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் காட்டுயிர்கள் மட்டுமல்லாமல் பூக்களின் நிறங்களே மாறும் அளவுக்கு நிலைமை சீர்கெட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வின் மூலம் புவிவெப்பமயமாதல், ஓசோன் சிதைவுகளின் பாதிப்பில் இருந்து மகரந்தங்களைக் காப்பாற்று பூக்கள் நிறம் மாறுவது கண்டறியப்பட்டுள்ளது. அவை தங்களுடைய புறஊதா நிறமிகளை மாற்றிக்கொள்வதாக உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரியல் தொடர்பான ஆய்விதழ் ஒன்றில் பூக்கள் பற்றிய ஆய்வு வெளியாகியுள்ளது. 42 வகைமைகளைச் சேர்ந்த 1238 பூக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவையெல்லாம் 1941ம் ஆண்டுக்கு முந்தையவை. அந்த பூக்கள் வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆ,ஸ்திரேலியா நாடுகளில் இருந்து சேகரிப்பட்டுள்ளன.

உலகில் ஏற்படும் புவிவெப்பமயமாதல், ஓசோன் சிதைவு போன்ற சூழலுக்கேற்ப பூக்கள், தங்களுடைய புறஊதா நிறமிகளை கடந்த 75 ஆண்டுகளாக மாற்றிவந்துள்ளதை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். புற ஊதா கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதைப் போல, பூக்களின் மகரந்தத்துக்கும் ஆபத்தாக உள்ளது.

புற ஊதாக் கதிர்களின் விளைவுகளைக் குறைப்பதற்காக, அவை தங்களுடைய இதழ்களின் நிறங்களை மாற்றிக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது அறிவுலகின் வியப்பாக இருக்கிறது.

“பூக்களின் புற ஊதா நிறமிகள் மனிதர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அவை மகரந்தச் சேர்க்கைகளை ஈர்க்கின்றன. மேலும் தாவரங்களுக்கு ஒரு வகையான சன் ஸ்கிரீனாக செயல்படுகின்றன” என்று கிளெம்சன் பல்கலைக்கழகத்தின் தாவர சூழலியல் அறிஞர் மத்தேயு கோஸ்கி விளக்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com