Eco India : மதுரையில் பராமரிப்பற்றுக் கிடந்த 1200 குளங்களை சீர்செய்த ‘தான்’ அமைப்பு

Eco India : மதுரையில் பராமரிப்பற்றுக் கிடந்த 1200 குளங்களை சீர்செய்த ‘தான்’ அமைப்பு
Eco India : மதுரையில் பராமரிப்பற்றுக் கிடந்த 1200 குளங்களை சீர்செய்த ‘தான்’ அமைப்பு
Published on

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மானிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’. இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா. இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிதண்ணீருக்கே திண்டாடும் நிலை இன்றும் இருக்கிறது. அந்தவகையில் மதுரைமாவட்டம் காம்பூர் என்ற கிராமத்து மக்கள் நீருக்காக அருகிலுள்ள குளங்களுக்கு அலைந்துகொண்டிருந்தனர். இந்த கிராமத்தில் எந்தவித நீர் மற்றும் குடிநீர் இணைப்புக்குழாய்களும் இல்லை. இங்குள்ள்ள குளத்திலிருந்து நீர் எடுப்பதற்கும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குடிதண்ணீருக்கே போராடிக்கொண்டிருந்த காம்பூர் மக்கள் தற்போது தங்கள் தண்ணீர் தேவையை தாங்களே பூர்த்தி செய்துகொள்கின்றனர். இந்த கிராமத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை சாத்தியமாக்கியது ’தான்’ (DHAN) என்ற தொண்டு நிறுவனம்.

’தான்’ அமைப்பு இந்த அமைப்பு பலநூறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க குடிமராமத்து முறைக்கு புத்துயிர் கொடுத்து வருகிறது. ’தான்’ நிறுவனத்துடன் குடிமக்கள் அனைவரும் இணைந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ’தான்’ நிறுவனம் ஒரு கிராமத்தில் வயலகம் என்ற விவசாய அமைப்பை ஏற்படுத்துவதுடன், அந்த அமைப்புடன் நிறுவனத்தின் திட்ட மேலாளர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு பராமரிப்புப் பணிகளை செய்கின்றனர். இந்த அமைப்புதான் அந்த கிராமத்தின் நீர் விநியோகத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏரி, குளத்திலிருந்து வண்டல்களை எடுத்து, மழை அரித்த பள்ளங்களை நிரப்பி, கரை உடைப்புகளை அடைத்து, தாக்கு எனப்படும் இந்த குடிமராமத்து பணியை மேற்கொள்கின்றனர். இதனால் பருவ மழையில் கிடைத்த தண்ணீரை அவர்களால் வருடம் முழுவதும் பயன்படுத்த முடிகிறது.

’தான்’ அமைப்பு சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது. அதாவது, பாழடைந்த கிணறு மற்றும் ஏரிகளுக்கு புத்துயிர் ஊட்டும் பணிகளை உள்ளுர் மக்களே திட்டமிடுகின்றனர். அதற்கு தேவையான நிதியாதாரத்தின் 25 விழுக்காடு பங்கினை மக்களே ஏற்கின்றனர். மீதி நிதியாதாரத்தை தொண்டு நிறுவனம் அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வயலகம் அமைப்பு, பாம்பார் பகுதிகளில் பராமரிப்பற்றுக் கிடந்த சுமார் 1200 குளங்களை சீர்செய்திருக்கின்றன. அதேபோல் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகின்ற ஊரணிகளின் பயன்களை உணர்ந்த ’தான்’ அமைப்பு, தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 300 ஊரணிகளை மீட்டெடுத்திருக்கின்றனர். ’தான்’ அமைப்பு, அந்தந்த பகுதி மக்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் குடிமராமத்து செய்து இதுவரை 4000 கிராமங்களில் நீர் நிலைகளை மீட்டெடுத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com