பாதாம் பருப்பு முந்திரிப் பருப்பு போன்றவற்றை உட்கொள்ளும் மெடிட்டரேனியன் டயட் பெருங்குடலில் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கொலோன் கேன்சர் எனப்படுவது பெங்குடலில் பரவும் புற்றுநோய். இந்த புற்றுநோய் தோன்றுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. பெருங்குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு டி.என்.ஏ.வில் ஏற்படும் மாற்றமே மிகப்பெரிய பிரச்சனை. இது தொடர்பாக பாஸ்டன் டனா-ஃபார்பர் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்திற்கு 57 கிராம் ட்ரீ நட்ஸ், 48 பாதாம் பருப்புகள், 36 முந்திரி பருப்புகள் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். அதனால் ஏற்படும் டி.என்.ஏ. மாற்றங்களும் தடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
தினந்தோறும் உடற்பயிற்சியுடன் சேர்ந்து, மெடிட்டரேனியன் டயட் எனப்படும் இந்த நட்ஸ் சாப்பிட்டுவந்தால் கேன்சர் பாதிப்பால் உயிரிழப்பதை நீண்ட நாட்களுக்கு ஒத்திப் போடலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.