தொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு

தொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு
தொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு
Published on

தொடர்ந்து‌ 10 மணி நே‌ரத்திற்கு மேல் வேலை செய்தால் பக்‌கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக‌ பிரான்ஸைச் சேர்ந்த நிறுவ‌‌‌னம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓராண்டில் குறைந்தது 50 நாட்களுக்கு 10 மணி நேரத்‌திற்கு மேல் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 45 ‌சதவீதம் இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஏஞ்சர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்ஸ் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.  

அதில் 1‌0 ஆண்டுகளுக்கு மேலாக‌ 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்த ஆயிரத்து 224 நபர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் பணிப்புரிபவர்களுக்கே இந்தப் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. பணிக்கு செல்வதை தவிர்க்க முடியாது என்றாலும் தகுந்த உடற்பயிற்சி, சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்‌னையிலிருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் அறுவுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com