கொரோனா தடுப்பு பணிக்காக தனியார் நிறுவனம் சார்பிலான சுகாதாரத்துறை ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா தடுப்புப் பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் தற்காலிக மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் 3 மாதத்திற்காக தற்காலிக பணிக்கு நியமனம் நடக்கும் நிலையில், ஒரு மாத சம்பளத்தை கமிஷனாக கேட்பதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் குற்றச்சாட்டியது. மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
அதன் அடிப்படையில் கொரோனா தடுப்புப் பணிக்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. முன்னதாக வெளியான ஆடியோவில், பணி நியமனம் பெற 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இடைத்தரகர் பேசும் வகையில் உள்ளது.