அரபிக்கடலில் கொச்சிக்கு அருகில் ‘நீருக்கடியில் ஒரு தீவு’?- கூகுள் மேப்பில் தென்பட்ட வடிவம்

அரபிக்கடலில் கொச்சிக்கு அருகில் ‘நீருக்கடியில் ஒரு தீவு’?- கூகுள் மேப்பில் தென்பட்ட வடிவம்
அரபிக்கடலில் கொச்சிக்கு அருகில் ‘நீருக்கடியில் ஒரு தீவு’?- கூகுள் மேப்பில் தென்பட்ட வடிவம்
Published on

அரபிக் கடலில் கொச்சிக்கு அருகில் நீருக்கடியில் ஒரு தீவு இருப்பது போல் கூகுள் மேப்பின் சேட்டிலைட் இமேஜில் தென்பட்டுள்ளது.

கரையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த தீவு வானில் இருந்து பார்ப்பதற்கு பீன்ஸ் காய் போன்ற வடிவில் உள்ளது. சுமார் 8 கிலோ மீட்டர் நீளமும், 3.5 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது இந்த தீவு. கிட்டத்தட்ட இது மேற்கு கொச்சியின் 50 சதவிகித நிலபரப்புக்கு சமமாம். 

செல்லனம் கர்ஷிகா சுற்றுலா மேம்பாட்டு சங்கம் என்ற சங்கத்தின் மூலம் கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைகழகத்தின் பார்வைக்கு இது தெரியவந்துள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக வல்லுனர்கள் குழு அது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாம். 

அந்த பகுதி நீருக்குள் மூழ்கி இருக்கும் கட்டட அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும் ஆய்வின் முடிவிலேயே தெரிய வரும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com