‘174 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்’ - நாசா சொன்ன திடுக்கிடும் தகவல்!

174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜுலை மாதத்தில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கடுமையான வெப்பம் பலவிதமான நோய்களையும் மரணத்தையும்கூட விளைவிக்கும். அந்தளவுக்கு வெப்பநிலை அதிகரிப்பு என்பது நோய் பரவுதல், காற்றின் தரம் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறது.

வயதானவர்கள் முதல் கைக்குழந்தைகள் வரை, கர்ப்பிணிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை... எல்லா தரப்பு மனிதர்களும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றனர்.

Global warming
Global warmingTwitter

இயற்கையின் மாறுபாடு என்பதும் அதனால் ஏற்படும் தாக்கம் என்பதும் பெரும்பாலும் மனிதர்களாகிய நம் செயல்பாட்டின் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. ஆகவே இதன் தாக்கமும் நமக்குத்தான் அதிகமாக இருக்கும். அதிலும் உலக வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு பேரழிவுக்கு வழிவகுக்கும்.

உலக வெப்பநிலையை குறித்து சமீபத்தில் நாசா, “பூமியில் கடந்த 174 ஆண்டுகளில் கடந்த ஜுலை மாதம் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜூலையை பொருத்தவரை உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை என்பது சராசரியைவிட 1.12 டிகிரி செல்சியஸ் அதிக அளவு வெப்பநிலை கொண்டதாக பதிவாகியுள்ளது.

Surface Temperature  of Earth -NASA
Surface Temperature of Earth -NASAfile image

முந்தைய அதிக அளவு வெப்பநிலையைவிட .36 டிகிரி பாரன்ஹீட் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெப்பநிலை உயர்வு என்பது நிலத்தில் மட்டுமல்லாது கடலிலும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வெப்பநிலை உயர்வுக்கு எல் நீனோ, புவி வெப்பமயமாதல் போன்றவவை காரணமாக இருக்கலாம்” என்றுள்ளது.

முன்னதாக  உலகளவில் கடந்த 1,20,000 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் பதிவாகியுள்ளதாக ஐ.நா அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். ஜூலை மாதத்தில் சராசரியாக ஒன்றரை டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இப்போதும் நாம் விழித்துக்கொள்ள தவறினால், விளைவுகளையும் நாமே சந்திக்க நேரிடும்.!

- Jenetta Roseline S

NASA
‘கடந்த 1 லட்சம் ஆண்டுகளில் அதீத வெப்பமான மாதம் இதுதான்’ - ஐ.நா சொன்ன பகீர் தகவல்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com