இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி
Published on

இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது

இந்த கழிவுகளில் பாதியளவு மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கின்றோம்.

உற்பத்தியாகின்ற 20 லட்சம் டன் கழிவுகளில் அதிகபட்சமாகச் சுமார் 5 லட்சம் டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை, கழிவுக் கூடங்களையே சென்றடைகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-18 ஆம் ஆண்டில் 7,08,445 டன் மின்னணுக் கழிவுகளும், 2018-19 ஆம் ஆண்டில் 7,71,215 மின்னணுக் கழிவுகளும், 2019-20 ஆம் ஆண்டில் 10,14,961 மின்னணுக் கழிவுகளும் உற்பத்தியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com