‘உலக பூமி தினம்’: சிறப்பு டூடுளை வெளியிட்ட கூகுள்!

‘உலக பூமி தினம்’: சிறப்பு டூடுளை வெளியிட்ட கூகுள்!
‘உலக பூமி தினம்’: சிறப்பு டூடுளை வெளியிட்ட கூகுள்!
Published on

இன்று உலக நாடுகள் முழுவதும் “உலக பூமி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். 

1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசுபடுவதை குறைக்கும் வகையிலும் ‘பூமி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் உலகில் உள்ள ஆறு வகையான தனித்தன்மை கொண்ட உயிரினங்களை பாதுகாக்கும் வகையிலும், அதன் தனித்திறனை போற்றும் வகையிலும் சிறப்பு டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 

1. உலகிலேயே மிக நீளமான இறக்கையை கொண்ட பறவை - வான்டரிங் ஆல்பட்ராஸ் 


2. உலகிலேயே மிக அதிக உயரமான மரம் - கோஸ்டல் ரெட்வுட்


3. உலகிலேயே மிக சிறிய முதுகெலும்பியான தவளை இனம் - பீடோஃபிரினே அமௌவன்சிஸ்


4. உலகிலேயே மிகப்பெரிய இலையையுடைய நீர்வாழ்த்தாவரம் - அமேசான் வாட்டர் லில்லி


5. உலகிலேயே மிக நீண்ட வருடம் உயிர்வாழும் நீர்வாழ் உயிரினம் - சீலகாந்த்


6. உலகிலேயே மிக அடர்ந்த இருளில் வாழும் கண்ணில்லாத உயிரினம் - டீப் கேவ் ஸ்பிரிங்டைல்.

Happy Earth Day 2019! Explore amazing organisms & their earthly superlatives in today's #GoogleDoodle!  
இந்த டூடுளைக் காண https://g.co/doodle/ruresu - என்ற இணையதளத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com