யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகள்: விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகள்: விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகள்: விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Published on

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இந்த வாரத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் 9 தனியார் கல்லூரிகளும் உள்ளன. அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 600க்கும் அதிகமான இடங்களும் உள்ளன. தனியார் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 60 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கியது. தற்போது இளநிலைப் படிப்புகளுக்கு வந்துள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பரிசீலித்துவருவதாகவும், இந்த வாரத்தில் தரவரிசைப்பட்டியல் வெளியாகும் எனவும் யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு கல்லூரி இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com