அருந்ததி ராயின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது சுந்தரனார் பல்கலை.

அருந்ததி ராயின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது சுந்தரனார் பல்கலை.

அருந்ததி ராயின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது சுந்தரனார் பல்கலை.
Published on

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரும், சமூக போராளியுமான அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades என்ற புத்தகம் 2017 ஆம் ஆண்டுமுதல் மனோன்மணியம் பல்கலைக்கழக எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் மூன்றாம் ஆண்டில் ஒரு பாடமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த புத்தகம் மாவோயிஸ்ட், நக்சல்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஏ.பி.வி.பி. அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து  கடந்த வாரம் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இந்த புத்தக விபரம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் நேற்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்  ஆலோசனைக்கு பிறகு அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை பாடத்திலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி “ குறிப்பிட்ட அந்த புத்தகத்தில் மாவோயிஸ்டுகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக கடந்த வாரம் ஏபிவிபி சார்பில் புகார் அளித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்தாலும், தற்போது அதன் சர்ச்சைக்குரிய கருத்துகள் எங்கள் பார்வைக்கு வந்ததால் இது குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அமைத்திருந்தோம். அக்குழுவின் முடிவுகளின்படி இந்த புத்தகத்தை நீக்கிவிட்டு தற்போது மாதவய்யா கிருஷ்ணன் என்பவர் எழுதிய my native land:essays of nature  என்ற புத்தகத்தை பாடத்திட்டத்தில் இணைத்துள்ளோம்” என தெரிவித்தார் 

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என்பதை ஆட்சியும், அதிகாரமும் முடிவு செய்யக்கூடாது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com