புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்தது ஏன்?- அன்பில் மகேஷ் விளக்கம்

புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்தது ஏன்?- அன்பில் மகேஷ் விளக்கம்
புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்தது ஏன்?- அன்பில் மகேஷ் விளக்கம்
Published on

புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் நடத்திய ஆலோனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது குறித்து பள்ளிக்  கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்திய ஆலோனைக் கூட்டத்தில் மாநிலக் கல்வித்துறை அமைச்சர்களும் பங்கேற்க அனுமதிக்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதற்கு அவர்களிடம் உரிய பதில் வரவில்லை. ஆகையால்தான் நாங்கள் கல்விக் கொள்கை கூட்டத்தை புறக்கணித்தோம்.

ஒருவேளை அவர்கள் 2 நாள் கழித்து எங்கள் கோரிக்கையைப் பார்த்து அழைத்தால் அப்போதும் கூட எங்கள் கருத்தை முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த ஈகோவும் கிடையாது. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். மத்திய அரசு குலக்கல்வி திட்டத்தை திணிக்க பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வி தொலைக்காட்சியை மாணவர்களுக்கு பிடித்த வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கொள்கையில் திருத்தம் இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்வோம். 12-வது வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும். ஆகையால் மாணவர்கள் எப்போதும் தேர்வு எழுத தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com