சிஎஸ்ஐ மோகனன் மகளிர் பள்ளியில் மதமாற்ற புகார் - யாருடைய அறிக்கை உண்மை?

சிஎஸ்ஐ மோகனன் மகளிர் பள்ளியில் மதமாற்ற புகார் - யாருடைய அறிக்கை உண்மை?
சிஎஸ்ஐ மோகனன் மகளிர் பள்ளியில் மதமாற்ற புகார் - யாருடைய அறிக்கை உண்மை?
Published on

சிஎஸ்ஐ மோகனன் மகளிர் மேல்நிலைப்பள்ளி மீதான புகார்கள் ஆதாரம் உள்ளது மாநில குழந்தைகள் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் மேல்நிலை மகளிர் பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டபோது மாணவிகளிடம் அனைத்து தரப்பு புகார்களையும் எழுத்துபூர்வமாக பெற்றுள்ளோம். பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை உள்ளிட்ட புகார்களோடு மதமாற்றம் தொடர்பான புகார்களும் பெறப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டு பெறப்பட்ட புகார்கள் குறித்து தமிழக தலைமைச் செயலாளரிடம் தேசிய குழந்தைகள் ஆணையம் சமர்பித்துள்ளது.

சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்ற குற்றச்சாட்டு வந்த புகார் தொடர்பாக, மாநில குழந்தைகள் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு ஆளுநரிடம் அறிக்கை அளித்ததை அடுத்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியுள்ளதாகவும், தமிழகத்தை பிளவுபடுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் குற்றச்சாட்டினை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில குழந்தைகள் பாதுகாபு மற்றும் உரிமைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தாங்கள் தெரிவித்துள்ள புகார்களுக்கு ஆதாரம் உள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாகவும் தமிழக ஆளுநரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் கல்வித் துறை சார்பாக கார்த்திகா ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் அங்கு மதமாற்றம் நடைபெறவில்லை என்று தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழக அரசு அமைத்த குழு ஒரு மாதிரியான அறிக்கையும், தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையம் கவர்னரிடம் கொடுத்த அறிக்கையில் முரண்பட்ட தகவலும் இருப்பது தெரியவந்துள்ளது. யாருடைய அறிக்கை உண்மை என்பது வரும் காலங்களில் தெரியவரும்.

-எம்.ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com