கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
Published on

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பிடெக் படிப்புகள் கற்பிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் ஆகஸ்ட் 24ம் தேதியன்று தொடங்கின. முதலில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி செப்டம்பர் 28ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்னும் விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் இந்தக் காலஅவகாச நீட்டிப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com