ஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு!

ஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு!
ஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு!
Published on

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இந்தியன் எகனாமிக் (Economic) சர்வீசஸ் (ஐ.இ.எஸ்), இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் (Indian Statistical) சர்வீஸ் (ஐ.எஸ்.எஸ்) மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

பணிகள் மற்றும் காலியிடங்கள்:-

1. புவியியல் ஆராய்ச்சியாளர்: 
  ஜியோலஜிஸ்ட் - 50
  ஜியோபிசிக்ஸ்ட் - 14
  கெமிஸ்ட் - 15
  ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் - 27 

மொத்தம் = 106 காலிப்பணியிடங்கள்

2. ஐ.இ.எஸ் & ஐ.எஸ்.எஸ்:-
  ஐ.இ.எஸ் - 32 
  ஐ.எஸ்.எஸ் - 33

மொத்தம் = 65 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2019, மாலை 6 மணி
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.04.2019, இரவு 11.59 மணி
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 16.04.2019, மாலை 6 மணி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக்கொள்ள கடைசி நாள்: 23.04.2019 முதல் 30.04.2019 மாலை 6 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2019

வயது வரம்பு:
1. புவியியல் ஆராய்ச்சியாளர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 32 வயது நிரம்பாதவராகவும் இருத்தல்
வேண்டும்.

2. ஐ.இ.எஸ் & ஐ.எஸ்.எஸ் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 30 வயது நிரம்பாதவராகவும் இருத்தல்
வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
1. ஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ்: 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள்  போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இவர்களை தவிர 
மற்ற (OBC / EWS ) அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கட்டணம் - ரூ.200 

2. புவியியல் ஆராய்ச்சியாளர்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள்  போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இவர்களை தவிர 
மற்ற (OBC / EWS ) அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கட்டணம் - ரூ.200

கல்வித்தகுதி:
1. புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியல் நிபுணர் போன்ற பணிக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் ஜியோலஜி,
இயற்பியல், வேதியியல் போன்ற இத்துறை சார்ந்த முதுகலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்றவராக இருத்தல் வேண்டும். 

2. ஐ.இ.எஸ் என்ற பணிக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக முதுகலை பட்டப்படிப்பில் எகனாமிக்ஸ் / அப்ளைடு எகனாமிக்ஸ் / பிசினஸ் எகனாமிக்ஸ் /
எக்னோமெட்ரிக்ஸ் போன்ற துறைகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்றவராக இருத்தல் வேண்டும்.  

3. ஐ.எஸ்.எஸ் என்ற பணிக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பில் புள்ளியியல் / வணிக கணிதவியல் / கணிதப் புள்ளியல் போன்ற
துறைகளை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்றவராக இருத்தல் வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://upsc.gov.in (or) https://upsconline.nic.in/mainmenu2.php - என்ற இணையதளத்தில் சென்று இந்தப் பணிகளுக்கான
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்து முழு தகவல்களைப் பெற, 
ஜியோ சயிண்டிஸ்ட் பணி:- https://upsc.gov.in/sites/default/files/GEOL2019-E_1.pdf மற்றும்  
ஐ.இ.எஸ் & ஐ.எஸ்.எஸ் பணி:- https://upsc.gov.in/sites/default/files/IES2019-E.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com