மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு!
மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு!
Published on

யுபிஎஸ்சி நடத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஎஸ்எஃப் (BSF), சிஆர்பிஎஃப் (CRPF), சிஐஎஸ்எஃப் (CISF), ஐடிபிபி (ITBP) மற்றும் எஸ்எஸ்பி (SSB) போன்ற பாதுகாப்பு படைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
சி.ஏ.பி.எஃப் (அசிஸ்டெண்ட் கமான்டெண்ட் (குரூப் - A பிரிவு))

காலிப்பணியிடங்கள்:
பிஎஸ்எஃப் (BSF) - 100
சிஆர்பிஎஃப் (CRPF) - 108 
சிஐஎஸ்எஃப் (CISF) - 28 
ஐடிபிபி (ITBP) - 21 
எஸ்எஸ்பி (SSB) - 66

மொத்தம் = 323 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 24.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 24.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2019, மாலை 06.00 மணி
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 19.05.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 20.05.2019, மாலை 06.00 மணி
ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப பெற கடைசி நாள்: 27.05.2019 முதல் 03.06.2019, மாலை 06.00 மணி வரை
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 18.08.2019 காலை மற்றும் மாலை

வயது வரம்பு:
01.08.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 20 வயதுடையவராகவும், அதிகபட்சமாக 25 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வும் உண்டு.

தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் / ஆண்கள் - ரூ.200
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை.

குறிப்பு:
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் திரும்பபெற இயலாது.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
கடைசி வருடம் கல்லூரியில் பயின்று கொண்டிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
எழுத்து தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகளின் கீழ் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.

குறிப்பு:
எழுத்து தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://upsconline.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற https://upsconline.nic.in/mainmenu2.php- என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com