சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: தேர்வு அறையில் எப்படி நடக்கவேண்டும்?

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: தேர்வு அறையில் எப்படி நடக்கவேண்டும்?

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: தேர்வு அறையில் எப்படி நடக்கவேண்டும்?
Published on

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் யுபிஎஸ்சி இணையதளம் மூலம் இ - அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து அதன் அச்சுப்பிரதியை எடுத்துவரவேண்டும். இதனை தேர்வுமையத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்கவேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் எடுத்துவரவேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தலாம். ஃமொபைல் போன்கள், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தங்களுக்கான கிருமிநாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டுவரவேண்டும்.

தேர்வுக்கூடத்திலும் வளாகத்திலும் சமூக இடைவெளி, தனிமனித சுகாதாரம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com