019 முதல் 2021ஆம் கல்வி ஆண்டுகளில் 12 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலச் சென்றுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உயர்க்கல்வி பயில செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என மக்களவை உறுப்பினர் ஹரீஸ் திவேதி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், 2019 முதல் 2021ஆம் கல்வி ஆண்டு வரை 12 லட்சத்து 92,903 மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உயர்க்கல்வி பயிலச் சென்றுள்ளனர் என பதிலளித்தார்.