வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு ! புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்

வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு ! புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்
வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு ! புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்
Published on

2017-18-ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்‌கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

கடந்த 1972-73ஆம் ஆண்டு முதலே வேலைவாய்ப்பின்மை தொடர்பான புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு வெளியாகி வந்திருக்கின்றன. இந்நிலையில், 1977-78ல், வேலையில்லாதோர் விகிதம் 2.5 சதவிகிதமாக இருந்திருக்கிறது. அதுவே 2011-12-ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 2.2 சதவிகிதமாக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2017-18-ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

2011-12-ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களின் விகிதம் 5 சதவிகிதமாக இருந்திருக்கிறது. அதுவே, கடந்த 2017-18ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களின் விகிதம் 17.4 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, கிராமப்புறங்களில் உள்ள பெண்களில் வேலையில்லாதோர் விகிதம் 2011-12ல் 4.8 சதவிகிதமாக இருந்திருக்கிறது. அதுவே 2017-18-ல், 13.6 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2011-12-ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் உள்ள வேலையில்லாத இளைஞர்களின் விகிதம் 8.1 சதவிகிதமாக இருந்திருக்கிறது. அதுவே 2017-18-ஆம் ஆண்டில் 18.7 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் உள்ள பெண்களில் 2011-12-ல் 13.1 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருந்ததாகவும், அது 2017-18-ல் அது 27.2 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com