கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும் என யுஜிசி கட்டுப்பாடு விடுத்துள்ளது.
கல்லூரிகளை திறப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, "கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா இல்லை என சான்றிதழ்கள் கொண்டு வந்தாலும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.