ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
Published on

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி மூலம் டெட் எனப்படும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு மூலம்  தமிழக அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் மட்டும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி: 28.02.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019 

குறிப்பு: முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் அல்லாதோருக்கான கட்டணம் : ரூ. 500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PWD ஆகியோருக்கான கட்டணம் : ரூ. 250

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் இரண்டையும் எழுத தனியாக தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.

கல்வித்தகுதி:

முதல் தாளுக்கான (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியர்) கல்வித்தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பை 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று, அத்துடன் 2- வருட டிப்ளமோ இன் எலமெண்டரி எடுகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது 4-வருட பேச்சுலர் இன் எலமெண்டரி எடுகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது 2-வருட டிப்ளமோ இன் எடுகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது பி.எட் படிப்பை படித்தவர்களோ அல்லது கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருப்பவர்களும் தகுதியானவர்கள்.

இரண்டாம் தாளுக்கான (6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியர்) கல்வித்தகுதி:

இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, அத்துடன் 2- வருட டிப்ளமோ இன் எலமெண்டரி எடுகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது 4-வருட பேச்சுலர் இன் எலமெண்டரி எடுகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது 2-வருட டிப்ளமோ இன் எடுகேஷன் படிப்பை படித்தவர்களோ அல்லது பி.எட் படிப்பை படித்தவர்களோ அல்லது கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருப்பவர்களும் தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

டிஆர்பி-யின், www.trb.tn.nic.in - என்ற இணையத்தில் சென்று தாள்-1 , தாள்-2 என தனித்தனியே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் இது குறித்த முழுத் தகவல் பெற, 
http://trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com