தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் டி.என்.பி.எஸ்.பி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம். இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணையை இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரியில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் திட்டமிட்டு தயாராகிக் கொள்வதற்கு ஏதுவாக இந்த அட்டவணை தோராயமாக வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்ட அட்டவணையை www.tnpsc.gov.inhttp:/www.tnpsc.gov.in?? அறியலாம்.
2018ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகள் மற்றும் 2019ஆம் ஆண்டின் 29 புதிய தேர்வுகளை சேர்த்து, மொத்தம் 52 தேர்வுகள் நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.