தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுங்கத்துறை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை சம்மந்தப்பட்ட பணிக்கு 60 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
அசிஸ்டெண்ட் ஜியோலஜிஸ்ட் (Assistant Geologist)
அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் (Assistant Geochemist)
காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டெண்ட் ஜியோலஜிஸ்ட் - 10
அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் - 05
மொத்தம் = 15 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.03.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 13.03.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 21.04.2019
தேர்வுக்கட்டண விவரம்:
நிரந்தர பதிவுக் கட்டணம் - ரூ.150
தேர்வுக்கான கட்டணம் - ரூ.150
வயது வரம்பு: (01.07.2019 அன்று)
பொதுப் பிரிவினர் - 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
மற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.
சம்பளம்:
மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
1. அசிஸ்டெண்ட் ஜியோலஜிஸ்ட் என்ற பணிக்கு, எம்.எஸ்சி- இல் ஜியோலஜி பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் என்ற பணிக்கு, எம்.எஸ்சி- ஜியோலஜி அல்லது அப்ளைடு ஜியோலஜி போன்ற பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான http://www.tnpsc.gov.in/ - சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுகுறித்த முழுத் தகவல்களை பெற,
http://www.tnpsc.gov.in/Notifications/2019_09_notifn_AG_AGC.pdf - என்ற இணையத்தில் பார்க்கவும்.