தமிழக மருத்துவத் துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கான 1,234 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse / Auxiliary Nurse Midwife)
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,234 காலிப்பணியிடங்கள்
சம்பளம்:
குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகப்பட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 13.11.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 15.11.2019
தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PH / DW - ரூ.300
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்புடன் 18 மாத (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பையோ அல்லது 12-ஆம் வகுப்புடன் கூடிய 2 வருட (Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers - Female) செவிலியர் தகுதி படிப்பையோ, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், http://www.mrb.tn.gov.in/ அல்லது https://mrbofficer.online-ap1.com/village/- என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.