எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு: இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு: இன்று தொடக்கம்
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு: இன்று தொடக்கம்
Published on

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியானது. நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதன்படி கடந்த 6ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியானது. கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோர் இன்று நடைபெறும் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து நாளை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளும், அரசு ஒதுக்கீட்டுக்காக 3,968 எம்.பி.பி.எஸ். இடங்களும், பி.டி.எஸ். படிப்புகளுக்கு 1,070 இடங்களும் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com