தமிழக அரசின் கீழ் செயல்படும் துறையில், அசிஸ்டண்ட் டைரக்டர், குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரி போன்ற காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமுள்ள பெண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணிகள் & காலியிடங்கள்:
1. அசிஸ்டண்ட் டைரக்டர் - 13
2. குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி - 87 + 2* (Deaf)
மொத்த காலியிடங்கள் = 100 + 2* (Deaf)
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 13.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 13.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.09.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 13.09.2019
தேர்வு நடைபெறும் தேதிகள்:
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 16.11.2019 மற்றும் 17.11.2019
ஊதியம்:
1. அசிஸ்டண்ட் டைரக்டர் (பெண்கள் மட்டுமே) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி (பெண்கள் மட்டுமே) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.36,100 முதல் ரூ.1,16,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. நிரந்தப் பதிவுக் கட்டணம்: ரூ.150
2. தேர்வுக் கட்டணம்: ரூ.200
வயது வரம்பு:
பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 வயது நிரம்பாமல் இருத்தல் அவசியம்.
கல்வித்தகுதி:
1. அசிஸ்டண்ட் டைரக்டர் என்ற பணிக்கு, முதுகலை பட்டப்படிப்பில் (ஹோம் சயின்ஸ் / சைக்காலஜி / சோசியாலஜி / சைல்டு டெவலப்மெண்ட் / நியூட்ரீசியன் / சோசியல் வெர்க்) போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி என்ற பணிக்கு, இளங்கலை பட்டப்படிப்பில் (ஹோம் சயின்ஸ் / நியூட்ரீசியன்) போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று தேர்ச்சியோ அல்லது இளங்கலை பட்டப்படிப்புடன் பி.ஜி டிப்ளமா இன் ரூரல் சர்வீசஸ் என்ற பட்டம் பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO_NEW.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.